சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லக்காபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தை யூனியன் கவுன்சிலர், மக்கள் முற்றுகை

Added : மார் 21, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கூடுதல் நேரம், குடிநீர் விட வலியுறுத்தி, யூனியன் கவுன்சிலருடன் சேர்ந்து, பஞ்., அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
மொடக்குறிச்சி யூனியன், லக்காபுரம் பஞ்., புதுவலசு பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மூன்று மாதமாக குறைவான நேரமே தண்ணீர் விடுவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதல் நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என்று, பஞ்., தலைவரிடம் வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்கள் புகாராக உள்ளது. இந்நிலையில் நேற்றும், 20 நிமிடம் மட்டுமே குடிநீர் வந்தது. இதனால் மூன்றாவது வார்டு யூனியன் கவுன்சிலர் கேசவனுடன் சேர்ந்து, பஞ்., அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்., தலைவர் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணாமல், 'தண்ணி' காட்டி வருகிறார். இதேபோல் ஈ.பி.,ஆபீஸ் வீதி உள்ளிட்ட பல இடங்களில், குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. யூனியன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் கூறினர். இதுகுறித்து பஞ்., தலைவர் கூறியதாவது: பஞ்சாயத்தில் பேட்டரி வாகனங்களுக்கு, 'ஷெட்' அமைக்கப்பட்டதால், தண்ணீர் செலவாகி விட்டது. யூனியன் கவுன்சிலர் கேசவன், தனிப்பட்ட விரோதம் காரணமாக, தண்ணீர் பிரச்னையை உருவாக்கி வருகிறார். புதுவலசு மக்களுக்கு, கூடுதல் நேரம் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X