சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபரை கடத்திய மூவர் மீது குண்டர் சட்டம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

அந்தியூர்: ஆப்பக்கூடல், மஞ்சமடைத்தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 40; கடந்த ஆண்டு, பண்ணை வீட்டில் இருந்தவரை, நீராவி முருகன் தலைமையில் சிலர், கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர்பாக, நீராவிமுருகன், அவரது கூட்டாளிகளான, மரியரகுநாத், 32, ஈஸ்வரமூர்த்தி, 27, உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும், பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சக்தி கணேசன் பரிந்துரைத்தார். இதை கலெக்டர் கதிரவன் ஏற்றுக் கொள்ளவே, மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனிடையே வழக்கில் முக்கிய குற்றாவாளி நீராவிமுருகனின் நெருங்கிய கூட்டாளியான, திருச்செங்கோட்டை சேர்ந்த ராஜேஷ், 26, என்பவரை, சில நாட்களுக்கு முன், சித்தோடு நால்ரோட்டில் பவானி போலீசார், கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X