சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதியதில் ? பேர் பலி

Added : மார் 21, 2020
Share
Advertisement

பவானி: லாரி மீது கார் மோதியதில், இருவர் பலியாகினர். பவானியை அடுத்த குருவ ரெட்டியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி, 45; குருவரெட்டியூர் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர். அதே பகுதியை சேர்ந்தவர் முத்து, 42; குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளி. சென்னம்பட்டியை சேர்ந்த செல்வத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரையும், அவரது நண்பரான மற்றொருவரையும் அழைத்துக் கொண்டு, போர்டு காரில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று புறப்பட்டனர். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நசியனூர் அருகே, 2:30 மணியளவில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற லாரி திடீரென, பாதை மாறி சென்றதால், அதன் பின்பகுதியில் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி, முத்து, பழனிச்சாமி உடல் நசுங்கி பலியாகினர். சித்தோடு போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். அதே சமயம் விபத்தில் காயமடைந்த செல்வம், அவரது நண்பரையும் மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X