காரை வாய்க்காலில் தரைப்பாலம் இடிப்பு; 4 மாதமாக 3 கி.மீ., சுற்றிச்செல்லும் மக்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: காரை வாய்க்காலில் தரைப்பாலம் இடிக்கப்பட்டதால், நான்கு மாதமாக, மூன்று கி.மீ., சுற்றிச் செல்வதாக, மாநகராட்சி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி, காரை வாய்க்கால் பகுதியில், பெரியார் வீதியில் இருந்து, கரூர் சாலை வெண்டிபாளையம் செல்ல, பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே தரைமட்ட பாலம் இருந்தது. மழை காலத்தில் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் தரைமட்ட பாலத்தை மேல்நிலை பாலமாக உயர்த்திக்கட்ட முடிவு செய்யப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன் தரைமட்ட பாலம் இடித்து அகற்றப்பட்டது. தோண்டப்பட்ட மண்ணை மலைபோல் குவித்து வைத்துள்ளனர். அதன் பிறகு, எவ்வித பணியும் நடக்கவில்லை. இதனால் மழை கால அவஸ்தையை, வெயில் காலத்தில் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நான்கு மாதமாக பணி நடக்காததால், நடந்து செல்லவே முடியவில்லை. டூவீலர், பிற வாகனங்களில் செல்வோர், மூன்று கி.மீ., தூரம் சுற்றி செல்கின்றனர். எந்த காரணத்தால், மாநகராட்சி நிர்வாகம் பணியை நிறுத்தியதென தெரியவில்லை. மழை காலத்துக்கு முன் பணியை முடித்தால் சரி. இவ்வாறு மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X