பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா குறித்து வதந்தி பரப்பிய பிளஸ் 1 மாணவர்: போலீஸ் எச்சரிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பகுதி யில், மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு என வதந்தி பரப்பிய, மற்றொரு மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே வேப்பஹள்ளியை சேர்ந்த, 16 வயது மாணவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். அதேபோல, மற்றொரு கிராமத்தை சேர்ந்த, 16 மாணவரும் பிளஸ் 1 படிக்கிறார். இதில் ஒரு மாணவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, பொய்யான தகவலை ஆன்ட்ராய்டு போன் உதவியுடன் டிசைன் செய்து சமூக வலைதளங்களில், மற்றொரு மாணவர் பரவ விட்டார். இந்த தகவல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில், பொய்யான தகவலால் பாதிக்கப்பட்ட மாணவர், பாப்பாரப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவருடன் படிக்கும் மற்றொரு மாணவர் தான், இந்த வதந்தியை பரப்பியுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து, பொய்யான தகவலை பரப்பிய மாணவரை போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், பள்ளி மாணவர் என்பதாலும், தற்போது பிளஸ் 1 தேர்வு நடந்து வருகிறது என்ற காரணத்தாலும், அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போலீசார் மாணவரை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X