பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் ஊரடங்குக்கு தர்மபுரி வணிகர்கள் ஆதரவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட அனைத்து வணிகர் சங்கம் சார்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மண்டல தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழக அரசும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி நாளை ஒருநாள் காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு வணிகர்கள், பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும், தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், முழுகடையடைப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X