சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவறையில் டிரைவர் பலி; போலீசார் தீவிர விசாரணை

Added : மார் 21, 2020
Share
Advertisement

மாரண்டஹள்ளி: பாலக்கோடு அருகே, தனியார் பால் கம்பெனி கழிவறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த, லாரி டிரைவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளியில் தனியார் பால் கம்பெனி உள்ளது. இங்கு பால் மற்றும் பதனிடப்பட்ட பொருட்களை பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். கம்பெனியில், ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி லாரி டிரைவர்களுக்கு, தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு அங்கே தங்கி பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், லாரி டிரைவராக பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யாநகரை சேர்ந்த மணிகண்டன், 35, என்பவர் நேற்று காலை, 8:00 மணியளவில் அங்குள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்து, காயங்களுடன் உயிரிழந்ததாக தெரிகிறது. மாரண்டஹள்ளி போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X