சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொப்பூர் கணவாயில் லோடு லாரி கவிழ்ந்ததில் டிரைவர்கள் காயம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

தொப்பூர்: தொப்பூர் கணவாயில், மிளகாய் தூள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், இருவர் காயமடைந்தனர். போக்குவரத்து நெரிசலில், மற்றொரு மீன் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் காயமடைந்தார்.
ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் இருந்து, மிளகாய் பவுடர் ஏற்றிக்கொண்டு, கேரளாவுக்கு லாரி சென்று கொண்டிருந்தது. எர்ணா குளத்தை சேர்ந்த தோதகுமார், 41, ஓட்டினார். அவருடன் மாற்று டிரைவரான கோட்டயத்தை சேர்ந்த சஜேய், 39, உடனிருந்தார். லாரி நேற்று காலை, 11:50 மணியளவில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபோது, பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த சென்டர்மீடியன் தடுப்பு கம்பியில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர்கள் தோதகுமார், சஜேய் படுகாயமடைந்தனர். தொப்பூர் போலீசார், எல் அண்ட் டி ஊழியர்கள் இணைந்து, காயமடைந்த லாரி டிரைவர்களை மீட்டு, தொப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தால், கணவாய் பகுதி யில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன. இதனால், தர்மபுரி-சேலம் பஸ் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.


* அதேபோல், விஜயவாடாவில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, பிரேக் பிடிக்காமல் பாறையில் மோதியது. இதில், மங்களூருவை சேர்ந்த லாரி டிரைவர் ரியாஷ், 38, காயமடைந்தார். இதையடுத்து, தர்மபுரியில் வந்த வாகனங்கள் வெள்ளக்கல் பகுதி யில் நிறுத்தி வைக்கப்பட்டு, மீட்பு பணிகள் முடிந்த பின் விடப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X