பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர், சூளகிரி பகுதியில் மழையால் மக்கள் மகிழ்ச்சி

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாதம் முதலே, வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இளநீர், கூழ், பதனீர், மோர், நுங்கு, தர்ப்பூசணி சாப்பிட்டு, மக்கள் உடல் சூட்டை தணித்து வருகின்றனர். கடந்த, 6ல் காலை நிலவரப்படி, நெடுங்கல் பகுதியில் மட்டும், 15.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கடந்த, 7ல் அதிகாலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில இடங்களில், லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக சூளகிரியில், 27 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் பகுதியில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசிய நிலையில், திடீரென மழை பெய்ய துவங்கியது. சில இடங்களில் சாரல் மற்றும் மிதமான அளவில் மழை பதிவானது. கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்தது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X