பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பதிக்கு நடைபயணம் சென்ற பக்தர்கள்; கோவில் மூடப்பட்டதால் ஊர் திரும்பினர்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: திருப்பதிக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள், கோவில் மூடப்பட்டதால் மீண்டும் ஊருக்கு திரும்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லூர், மூலம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 350க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கடந்த, 16ல் நடை பயணமாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அவர்கள், இரவு நேரங்களில் வழியில் உள்ள கோவில்களில் தங்கிவிட்டு, மீண்டும் காலை தங்களது நடைபயணத்தை துவங்குவர். அதன்படி, தமிழக - ஆந்திரா எல்லையான பரதராமி என்ற இடத்திற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்த போலீசார் நடைபயணமாக சென்ற பக்தர்களை, மீண்டும் ஊருக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, பக்தர்கள் அங்கிருந்து பஸ்கள் மூலம் நேற்று காலை ஊத்தங்கரைக்கு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X