பொது செய்தி

தமிழ்நாடு

அதிக விலைக்கு முக கவசம் விற்ற மருந்து கடைக்கு 'சீல்'

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: தளியில், தனியார் மெடிக்கல் ஸ்டோருக்கு மருத்துவ குழுவினர் சீல் வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜிவ்காந்தி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர், தளி பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருந்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பிரபு என்பவர் நடத்தி வந்த, பாலாஜி மருந்து கடையில், அதிக விலைக்கு முக கவசம் மற்றும் மருந்துகளை விற்பனை செய்வதும், ஆவணங்களை சரியாக பராமரிக்க தவறியதும் தெரிந்தது. இதையடுத்து, மருத்துவ குழுவினர் மருந்து கடை உரிமத்தை ரத்து செய்து சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X