பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் 10 பேர் பலி: ஒன்பது பேருக்கு முதல்வர் நிவாரண நிதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில், பலியான தமிழர்கள் ஒன்பது பேருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த சீக்கனப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 35. விவசாயி; இவர் கடந்த, 4 ல், தன் மனைவி தனுஜா, 28. மகள் மாலா ஸ்ரீ, 4, 11 மாத ஆண் குழந்தை சைத்தன்யா ஈஸ்வர் ஆகியோருடன், கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா கோவிலுக்கு டவேரா காரில் சென்றார். மஞ்சுநாத்தின் குடும்ப உறவினரான சவுந்தர்ராஜ், 48, அவரது மகள் திரிசன்யா, 13, மற்றும் கவுரம்மா, 55, ரத்தினம்மா, 60, அங்கன்வாடி பணியாளர் சரளா, 32, மற்றும் அர்சிதா, 10, சுவேதா, 35, கங்கோத்திரி ஆகியோரும் உடன் சென்றனர். சீக்கனப்பள்ளியை சேர்ந்த ராஜேந்திரன், 26, காரை ஓட்டினார். தர்மஸ்தலா கோவிலில், மஞ்சுநாத் மகன் சைத்தன்யா ஈஸ்வருக்கு மொட்டை போட்டு, சுவாமி தரிசனம் செய்து விட்டு கடந்த, 6ல் அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம், தும்கூர் அடுத்த குனிகல் அருகே, எதிர் சாலையில் தர்மஸ்தலா நோக்கி சென்ற மாருதி சுசூகி விட்டாரா பிரிசா காரின் டயர் வெடித்து, சாலை தடுப்புச் சுவரை தாண்டி வந்து, டவேரா கார் மீது மோதியது. இதில், மஞ்சுநாத், அவரது மனைவி தனுஜா, மகள் மாலாஸ்ரீ, குழந்தை சைத்தன்யா ஈஸ்வர், சவுந்தர்ராஜ், அவரது மகள் திரிசன்யா மற்றும் கவுரம்மா, ரத்தினம்மா, சரளா, டிரைவர் ராஜேந்திரன் ஆகிய, 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, ஓசூர் ஆர்.டி.ஓ., குமரேசன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் ஆகியோர், நேற்று சீக்கனப்பள்ளிக்கு நேரில் சென்று, அங்கன்வாடி பணியாளர் சரளா தவிர, மற்ற ஒன்பது பேரின் குடும்பத்தினரிடம், தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X