பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டுச்சந்தைக்கு தடை: ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.தெலுங்கு வருட பிறப்பான, யுகாதி பண்டிகை வரும், 25ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது, 'கொரோனா' வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில்,

கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், 10 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தெலுங்கு வருட பிறப்பான, யுகாதி பண்டிகை வரும், 25ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ஆட்டுச் சந்தையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது, 'கொரோனா' வைரஸ் பரவி வருவதை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் வாரச்சந்தைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதை அறியாத மக்கள் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், சந்தை கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால், ஆர்.டி.ஓ., தெய்வநாயகி தலைமையில் வருவாய்த்துறையினர், எஸ்.பி., குமார் தலைமையில் குருபரப்பள்ளி போலீசார், ஆடுகளை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வந்தவர்களை திருப்பி அனுப்பினர். ஆடுகள் விற்பனை செய்யும் இடத்தில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சில விவசாயிகள், ஆடுகளை சந்தைக்கு கொண்டு செல்லாமல், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலும், அருகில் உள்ள வயல்களிலும் ஆடுகளை விற்பனை செய்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ரம்ஜான், பக்ரீத், தெலுங்கு வருட பிறப்பு ஆகிய பண்டிகை நாட்களில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். இதில், 50 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்று விடும். ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதால், 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும். தற்போது, சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், வழக்கத்தை விட ஒரு ஆடு, 1,000 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு டோல்கேட் பகுதிகளிலும், வயல்வெளி பகுதிகளிலும் விற்பனை செய்துள்ளோம். இந்தாண்டு கொரோனா பாதிப்பு அச்சத்தால், சந்தைக்கு தடை விதிக்கப்பட்டதால், விற்பனை நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X