போட்டோ ஸ்டுடியோ லேப்கள் நாளை மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போட்டோ ஸ்டுடியோ லேப்கள் நாளை மூடல்

Added : மார் 21, 2020
Share
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு வீடியோ அண்ட் போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி, இந்நோய் தடுப்பு குறித்து, நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு வீடியோ அண்ட் போட்டோ கிராபர்ஸ் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி, இந்நோய் தடுப்பு குறித்து, நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையேற்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போட்டோ ஸ்டுடியோக்கள், வீடியோ எடிட்டிங் நிறுவனங்கள், புகைப்பட உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கலர் லேப்கள் ஆகியவற்றை நாளை ஒரு நாள் முழுவதும் மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X