கடைகளுக்கு நாளை விடுமுறை விட வணிகர் சங்க தலைவர் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளுக்கு நாளை விடுமுறை விட வணிகர் சங்க தலைவர் வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (மார்ச் 22) கடைகளுக்கு விடுமுறை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, அனைத்து வணிகர் சங்கத் தலைவர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிரதமர் மோடி, இந்நோய் தடுப்பு குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளின்படி, நாளை காலை, 7:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும், ஒருநாள் மட்டும் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X