சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதிக்கு தீ வைத்தவர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: அஞ்செட்டி அருகே, வனப்பகுதிக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உப்புராணி வனப்பகுதியில், வன காப்பாளர் வினித்திரா, வன காவலர் பெருமாள் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் புகை மூட்டம் வருவதை கண்ட வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, வனப்பகுதியில் காய்ந்த புல் மற்றும் இலைகளை, ஒருவர் தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது, அஞ்செட்டி அடுத்த ஏ.புதூரை சேர்ந்த மாதன், 55, என்பதும், காய்ந்த புல் மற்றும் இலைகளை தீயிட்டு கொளுத்தினால், புற்கள் மீண்டும் செழிப்பாக வளரும் என நினைத்து, அவர் தீ வைத்தது தெரிந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X