சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; பல லட்சம் தப்பியது

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே, 'இந்தியா ஒன்' என்ற தனியார் ஏ.டி.எம்., மையம் உள்ளது. சுற்றுப்புற மலை கிராமப்பகுதி மக்கள், பணம் எடுக்க இந்த மையத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். மையத்தில் பணம் இல்லாவிட்டால், 8 கி.மீ., தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்கு தான் மக்கள் செல்ல வேண்டும். இந்நிலையில், நேற்று அதிகாலை ஏ.டி.எம்., மையத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை சேதப்படுத்திய மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அங்கு ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததுடன், பொதுமக்கள் சத்தம் கேட்டு வந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்த தப்பி சென்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தாய்மார்கள் பாலூட்டும் அறைக்கு அருகே உள்ள, 'இந்தியா ஒன்' என்ற ஏ.டி.எம்., இயந்திரத்தை கடந்த டிச., 13 அதிகாலை உடைத்து, மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி, தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X