புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : மார் 21, 2020
Share
படித்துறை சீரமைக்கப்படுமா? கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கருப்பண்ணன் சுவாமி கோவில் அருகில் கட்டளை புதிய வாய்க்காலில் படித்துறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த படித்துறை மூலம் குளித்து வருகின்றனர். தற்போது கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அச்சத்துடன் குளிக்க வேண்டியுள்ளது. இந்த படித்துறையை சரி செய்ய பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க

படித்துறை சீரமைக்கப்படுமா? கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை கருப்பண்ணன் சுவாமி கோவில் அருகில் கட்டளை புதிய வாய்க்காலில் படித்துறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த படித்துறை மூலம் குளித்து வருகின்றனர். தற்போது கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அச்சத்துடன் குளிக்க வேண்டியுள்ளது. இந்த படித்துறையை சரி செய்ய பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.நாகராஜ், லாலாப்பேட்டை.

டவுன் பஸ் நின்று செல்ல வேண்டும்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளுக்கடை பாலம் அருகில் அரசு பத்திர பதிவு ஆபீஸ் மற்றும் சார்நிலை கருவூலம் செயல்படுகிறது. இங்கு வரும் மக்கள், பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து வருகின்றனர். வயதானவர்கள் நீண்ட தூரம் நடக்கும் போது மயக்கம் ஏற்படுகிறது. ஆகையால் கள்ளுக்கடை பாலம் அருகில் கரூர், திருச்சி வழியாக செல்லும் நகர டவுன் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.சண்முகம், கிருஷ்ணராயபுரம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X