பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தாக்கம்: கரூரில் கோவில்கள் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கரூர்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நேற்று கரூரில் கோவில்கள் மூடப்பட்டன. சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ், நம் நாட்டிலும் பரவ துவங்கியுள்ளது. இதனால், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே, சினிமா தியேட்டர்கள், மால், வாரச்சந்தைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளை காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், மாரியம்மன் கோவில்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆகம விதிகள் படி, காலபூஜைகள் நடத்தப்பட்டன. ஆனால், கரூர் நகரில் ஜவுளி கடைகள், நகை கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X