பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மின் கம்பம் சீரமைக்கப்படுமா? குளித்தலை அடுத்த, சிந்தலவாடி கிராமத்தில் கிழக்கு காலனி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு மின் கம்பத்தில் சிமென்ட் சிலாப்பு சேதம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பம் முழுவதும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதேபோல், 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் ஏற்பட்ட மின்கம்பத்தினை மாற்றியமைக்க, மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தரமற்ற குடிநீர் பாட்டில் விற்பனை: குளித்தலை பகுதியில், மூன்று குடிநீர் பாட்டில் விற்பனை மையம் செயல்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவின்படி உரிய அனுமதியில்லாத குடிநீர் பாட்டில் விற்பனை மையம், 'சீல்' வைக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு தெரியாமல் குடிநீர் பாட்டிலில் பெயர் போடாமல் தரமற்ற வகையில் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. திருமண மண்டபங்களில், அவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வருவாய் மற்றும் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்க்கால் பாலம் கடும் சேதம்: குளித்தலை, தென்கரை பாசன வாய்க்கால், மாயனூர் கதவணையில் இருந்து, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை வழியாக பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இணைகிறது. இதில், 10க்கும் மேற்பட்ட நடைபால தடுப்பு கட்டைகள் சேதமடைந்தள்ளன. இரு சக்கர வாகனத்தில் வரும் பொது மக்கள் பாலத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. சேதமான பாலத்தின் தடுப்பு கட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலையில் மண் சரிவு: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் பணிக்கம்பட்டி நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் கல்லுப்பாலம் சிறிய பாலம் பகுதியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்தை சந்திக்கின்றன. பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சிறிய பாலத்தில் மண் சரிவை சரி செய்ய, டவுன் பஞ்., நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

பஸ் ஸ்டாண்டில் சுகாதார சீர்கேடு: குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., பேரூர் பஸ் ஸ்டாப்பில் குடிமகன்கள் மது பாட்டில்களை உடைத்து சேதம் செய்துள்ளனர். அந்த இடத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிக்கு செல்லும் பொது மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இதேபோல், கடைவீதியில் உள்ள மின் கம்பம் மற்றும் நடைபாதையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பஞ்., நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X