தமிழ்நாடு

பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரிநீர் ஆய்வுப் பணிக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

Added : மார் 21, 2020
Share
Advertisement

கரூர்: பஞ்சப்பட்டி ஏரிக்கு, காவிரியாற்றின் உபரி நீரை கொண்டு செல்ல, ஆய்வுப் பணிக்காக, 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்து யூனியன், பஞ்சப்பட்டியில், பழமை வாய்ந்த மிகப்பெரிய ஏரி உள்ளது. 170 ஏக்கர் கொண்ட ஏரி கரையின் நீளம், 1,998 மீட்டர். கரையின் உள்பக்கத்தில், 1,200 மீட்டர் அளவிலும், மேல் பக்க அகலம், 5 மீட்டர் ஆகும். ஏரியின் மொத்த நீர் கொள்ளவு, 18 ஆயிரம் அடி. இந்நிலையில், கடவூர் மலைபகுதியில் அதிகளவில் மழை பெய்தால்தான், ஏரிக்கு தண்ணீர் வரும். ஆனால், பஞ்சப்பட்டி ஏரியின் நீர் வழித்தடம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், மழை பெய்தாலும் கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வருவது இல்லை. ஏரி முழுவதும், சீமை கருவேல மரங்கள் முளைத்து வறண்ட நிலையில் உள்ளது. இதனால், காவிரியாற்றில் வரும் உபரி நீரை, மாயனூரில் இருந்து பஞ்சப்பட்டி கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், காவிரியாற்றில் இருந்து மேடான பகுதியில், பஞ்சப்பட்டி ஏரி உள்ளதால், தண்ணீர் கொண்டு செல்ல முடியாது என, பொதுப்பணி துறை அதிகாரிகள் காலம் கடத்தி வந்தனர். ஆனால், பஞ்சப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். தற்போது, மாயனூர் காவிரியாற்றில் இருந்து தண்ணீரை நீரேற்றம் செய்து, பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்ல, ஆய்வு பணிகளை துவக்க, 10 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசு முதல்படியை எடுத்து வைத்துள்ளது. அதை, ஆய்வு பணிகளோடு நிறுத்தி விட கூடாது. காமராஜர் முதல்வராக இருந்த போது, ஆய்வு பணிகள் நடந்தன. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது, ஆய்வுப்பணிக்காக, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து, காவிரியாற்றின் உபரி நீர் பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு செல்லும் திட்டம் நிறைவேறும் பட்சத்தில், போத்துராவுத்தான்பட்டி, பஞ்சப்பட்டி, பாப்பாக்காப்பட்டி, சிவாயம் மற்றும் கடவூர் தாலுகாவில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள, விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். விவசாய நிலப்பரப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டும் உயரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X