பொது செய்தி

தமிழ்நாடு

ஈசநத்தத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

அரவக்குறிச்சி: ஈசநத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கரூரிலிருந்து, ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் நகருக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஈசநத்தம் நகரில் உள்ள கடைகளின் முன்புறம், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக கடைக்காரர்கள் கூரைகளை அமைத்திருந்தனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் அனுமதியின்றி கடைகள் முன் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை, அரவக்குறிச்சி போலீசார் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். அப்போது, கடைக்காரர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X