மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடிநீரின்றி நோயாளிகள் அவஸ்தை

Added : மார் 21, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகள், உறவினர்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில், நோயாளிகள், பொதுமக்கள் வசதிக்காக, குடிநீர் வசதி கடந்த, சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, அதில் குடிநீர் வருவது இல்லை. தொட்டி மற்றும் ஆர்.ஓ., சிஸ்டம் சேதமடைந்துள்ளது. இதனால், நோயாளிகள், உறவினர்கள் குடிநீர் இல்லாமல், மருத்துவமனைக்கு வெளியே, ஒரு லிட்டர் குடிநீரை, 20 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். இதனால், கரூர் அரசு மருத்துவமனை கல்லூரியில், குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், மருத்துவமனையில், நோயாளிளுக்கு மருந்துகள் சப்ளை செய்யும் இடத்துக்கு அருகே உள்ள, கழிப்பிடத்திலும் தண்ணீர் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மருத்துவ கல்லூரி மருத்துவமனை கழிப்பிடத்துக்கு, தண்ணீர் வசதியை செய்து தர வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X