புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : மார் 21, 2020
Share

குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுமா? மல்லசமுத்திரம் ஒன்றியம், குப்பிச்சிபாளையம் பஞ்., மரப்பரை ஆதிதிராவிடர் தெருவில், 100க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி குடிநீர் வரவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, வாரம் இருமுறை காவிரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.ராஜேஷ்கண்ணா, மரப்பரை.

குழாய் சீரமைப்பு பணி தாமதம்: குமாரபாளையம், வேதாந்தபுரம் பகுதியில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளன. நகராட்சி மயானம் செல்ல இந்த வீதி வழியாகதான் ஆம்புலன்ஸ் செல்வது வழக்கம். இரு நாட்களாக குழாய் சீரமைப்பு பணி நடக்கிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, இந்த குழாய் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ராம்கி, குமாரபாளையம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X