பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி தொழில் முடக்கம்: உற்பத்தியாளர்கள் கவலை

Added : மார் 21, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: கொரோனா வைரசால், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்து, தொழில் அடியோடு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிபாளையம் வட்டாரத்தில், முக்கிய தொழிலாக ஜவுளி உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகவாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். லுங்கி, சட்டை, வேட்டி, சேலை மற்றும் பல்வேறு துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை, வடமாநில வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர். ஈரோடு ஜவுளி சந்தையிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். உற்பத்தியும், விற்பனையும் ஓரிரு மாதங்கள் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டாலும், அடுத்தடுத்து வரும் மாதங்களில் சீராக இருக்கும். நூல் விலை ஏற்றம், விற்பனை குறைவு போன்ற காரணங்களால், கடந்த தீபாவளிக்கு பிறகு ஜவுளித் தொழில் சரிவை நோக்கி செல்கிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால், உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து, பள்ளிபாளையம் வட்டார ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி கூறியதாவது: ஏற்கனவே ஜவுளித் தொழில் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. தற்போது, கொரோனா வைரசால் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் தேங்கியுள்ளன. விற்பனை செய்த ஜவுளிகளுக்கு பணமும் வருவதில்லை. தொடர்ந்து, தொழிலை நடத்துவதே கேள்விக்குறியாகி விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X