தமிழ்நாடு

இயற்கை முறை சாகுபடிக்கு 1,000 ஏக்கர் இலக்கு: நாமக்கல் மாவட்டத்தில் 520 ஏக்கர் பதிவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்காக, மாவட்டத்தில், 1,000 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், 520 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் அன்றாடும் உணவில் பயன்படுத்தக் கூடிய காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

பின் விளைவுகள் இல்லை: ரசாயனம் கலந்த காய்கறிகளை உட்கொள்ளும்போது, நம் உடலுக்கு, பல்வேறு கெடுதல்கள் வந்து சேர்கின்றன. ஆனாலும், வேறுவழியின்றி, காசு கொடுத்து வினையை வாங்கிக் கொள்கிறோம். ஆனால், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்களை வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, எவ்வித பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை. அதனால், மக்களுக்கு, ரசாயனம் கலக்காத, இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, நாமக்கல் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: காய்கறி பயிர்களில், ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தும்போது நச்சுத்தன்மை இருக்கும். அவற்றை வாங்கி பயன்படுத்தும்போது, பல்வேறு விளைவுகள் ஏற்படுத்தும்.

முன்னுரிமை: ஆனால், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகளை, ஒருங்கிணைந்து, பயிர் பாதுகாப்பு முறையில் காய்கறிகளை சாகுபடி செய்தால், அவற்றை உட்கொள்பவர்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. மேலும், காய்கறிகள் கெட்டுப்போகாமல், சில நாட்கள் வரை அப்படியே இருக்கும். அதனால், நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

520 ஏக்கர் பதிவு: அதன்படி, 1,000 ஏக்கரில், இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளும், இயற்கை சான்றிதழ் பெற்று, பதிவு செய்துள்ளனர். தற்போது, இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதற்காக, மாவட்டத்தில், 520 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X