பொது செய்தி

தமிழ்நாடு

100 கிராம் சில்லி சிக்கன் ரூ.10: 'கொரோனா' விழிப்புணர்வு ஏற்படுத்த அதிரடி

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'கொரோனா' பீதியில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
'கொரோனா' வைரஸ் தொற்று, கோழிகள் மூலம் பரவியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால், கறிக்கோழி, முட்டை விற்பனை, வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. அதன் மூலம், பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பண்ணையாளர்கள் நேரடியாக களம் இறங்கியுள்ளனர். கிராமம் கிராமமாக சென்று, முட்டையை குறைந்த விலைக்கு நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல், கறிக்கோழி கடை உரிமையாளர்களும், ஆங்காங்கே அதிரடி விலை குறைப்பு செய்து, விற்பனை செய்து வருகின்றனர். மூன்று கிலோ சிக்கன், 99 ரூபாய், இலவசமாக சிக்கன் வறுவல், ஒரு கிலோ சிக்கனுக்கு, நான்கு முட்டை என, கறிக்கடை உரிமையாளர்கள், சலுகை அறிவித்து, விற்பனையை செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூரில், ஒரு கிலோ சிக்கன், 50 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய், கால் கிலோ, 25 ரூபாய், ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இரண்டு நாட்களுக்கு மட்டும் என, அறிவித்து இரண்டு நாட்கள் இந்த விற்பனையை மேற்கொண்டார். அதன் மூலம், ஒரே நாளில், 50 கிலோ சில்லி சிக்கன் விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து, கடை உரிமையாளர் குமரவேல் கூறியதாவது: 'கொரோனா வைரஸ்' கோழிகள் மூலம் பரவவில்லை என, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அவற்றை நம்பாததால், முட்டை, கறிக்கோழி விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இந்த சலுகையை அறிவித்தேன். அதன்படி, 100 கிராம் சில்லி சிக்கன், 10 ரூபாய், கால் கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். இரண்டு நாட்கள் நடந்த இந்த விற்பனையில், ஒரே நாளில், 50 கிலோ சில்லி சிக்கன் விற்பனையானது. மற்ற நாட்களில், 15 கிலோ சில்லி சிக்கன் விற்பனையானது. இவ்வாறு, அவர் கூறினார்.

விலை குறையாத ஆம்லெட்: ஒரு முட்டை கொள்முதல் விலை, 195 என, 'நெக்' நிர்ணயித்துள்ளது. பண்ணைகளில், 125 முதல், 150 காசுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், ஓட்டல்களில், ஒரு ஆம்லெட், 15 முதல், 18 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பண்ணைகளில் கொள்முதல் விலை, 450 காசாக இருந்த போது, ஒரு ஆம்லெட், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை சரிந்துள்ள நிலையிலும், ஆம்லெட் விலை குறைக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X