பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் விடுமுறை: சத்துணவு முட்டை நேரடியாக வினியோகம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் பீதியால், தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, சத்துணவு முட்டைகள், சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரை வரவழைத்து, வினியோகம் செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பீதியால், கடந்த, 17 முதல், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களும் திறக்கப்படவில்லை. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, சத்துணவுடன், தினமும், ஒரு முட்டை வழங்கப்படுகிறது. அதன்படி, தினமும், 40 லட்சம் வீதம், வாரத்துக்கு, இரண்டு கோடி முட்டை சப்ளை செய்யப்படுகிறது. அவற்றை, அந்தந்த பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு ஏற்ப, மாநிலத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும், ஒப்பந்ததாரர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சத்துணவு மையங்களுக்கு, தேவையான முட்டை அனுப்பப்பட்டுள்ளது. அந்த முட்டைகளை இருப்பு வைத்துக் கொள்ளாமல், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வழங்கும்படி, அமைப்பாளர்களுக்கு, பி.டி,.ஓ.,க்கள் அறிவுறுத்தினர். அதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, தாங்களோ அல்லது மாணவர்களோ வந்து, முட்டை பெற்றுச் செல்லும்படி தெரிவித்தனர். தகவல் பெற்ற பெற்றோர் நேரடியாகவும், தங்கள் மகன், மகள் மூலமாகவும், சத்துணவு மையத்துக்கு சென்று, முட்டையை பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X