பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், ரெட்கிராஸ் சார்பில், பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, 'யூத் ரெட் கிராஸ்' மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பயணிகளுக்கும் மற்றும் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், வெளி நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கைகள் சுத்தமாக கழுவுவதற்காக சோப், கைத்தறி துண்டு, மாஸ்க் போன்றவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஷ் கண்ணா, கல்லூரி திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X