பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களின் நடை அடைப்பு: பக்தர்களுக்கு தடை

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தின் பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டுள்ளது. மேலும், வரும், 31 வரை பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தர்க்காக்கள் ஆகியவற்றில், பக்தர்கள், பொதுமக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களின் நடை, இன்று முதல் அடைக்கப்படுகிறது. 'அறநிலையத்துறை உத்தரவின்படி, கோவில்களில் பக்தர்களின் தரிசன சேவை நிறுத்தப்பட்டுள்ளது' என, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மற்றும் அதன் துணைக் கோவில்கள். மோகனூர், காந்தமலை பாலதண்டாயு தபாணி சுவாமி கோவிலில், நித்ய பூஜைகள் தொடர்ந்து நடக்கும். விசேஷ பூஜைகள் நடக்காது. பக்தர்களின் தரிசனம், மறு உத்தரவு வரும் வரை, தடை செய்யப்படுகிறது. மேலும், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் சவுந்தரவள்ளி அம்பாள் கோவிலில், இன்று, சனிப்பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடப்பது வழக்கம். அதில், பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பர் என்பதால், சனி பிரதோஷத்துக்கு, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதையடுத்து, கோவில் நடையும் சாத்தப்பட்டது. மாவட்டத்தில், பெரும்பாலான கோவில்களின் நடை சாத்தப்பட்டுள்ளதுடன், வரும், 31 வரை, பக்தர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X