பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சாலையில் செல்லும் கழிவுநீரால் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் நடுவே செல்கிறது. அருகில் அரசுப் பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைந்திருப்பதால், மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தொற்றுநோய் பரவக்கூடும் என்பதால், பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல, வடிகால் அமைக்க வேண்டும்.
பிரதான சாலையில் விளக்குகள் தேவை: எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. இதுவரை, விளக்குகள் அமைக்கப்படவில்லை. விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். திருடர்களாலும் மக்களுக்கு அச்சுறுத்தல் நிகழ, வாய்ப்புள்ளது. மின்விளக்குகள் அமைக்க, சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருமி நாசினி தெளிக்கப்படுமா? குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவிரி பாலம் கீழ் பகுதியில் கழிவுநீர் பெருமளவில் தேங்கியுள்ளது. துர்நாற்றத்தால், பாலத்தில் செல்வோர், அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர். குளிக்க மற்றும் துணி துவைக்க செல்வோர் இதன் வழியாக தான் செல்ல வேண்டும். தொற்று நோய் விழிப்புணர்வு செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், இங்கு கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும்.

சேதமடைந்துள்ள எச்சரிக்கை பலகை: பள்ளிபாளையம் அடுத்த, ஐந்துபனையில் வேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடன் வரவேண்டும் என்பதற்காக, எச்சரிக்கை பலகையம் வைக்கப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது, பல மாதங்களுக்கு முன் சேதமடைந்து கீழே விழுந்து விட்டது. தற்போது காட்சிப் பொருளாக உள்ளது. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

பகலில் எரியும் மின்விளக்கு: திருச்செங்கோடு அருகே, மோர்பாளையத்திலிருந்து பருத்திபள்ளி, வட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை அருகே மின்கம்பம் உள்ளது. இதில், எந்நேரமும் விளக்கு எரிந்து கொண்டே உள்ளது. இதனால், மின்சாரம் வீணாவதுடன், மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரத்தில் எரியும்படியும், பகலில் அணைத்து விடவும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X