பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள, கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பொதுமக்களுக்கு கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். தொடர்ந்து, ஆவத்திபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், கை கழுவுவதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டதை பார்வையிட்டார். அப்போது, கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், வைரஸ் நோய் தொற்று வராமல் தடுக்க முடியும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X