பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: '1077' எண்ணில் தொடர்பு கொள்ள அழைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'கொரோனா' வைரஸ் (கோவிட்-19) தடுப்பு, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. பொதுமக்கள், 1077 மற்றும் 8220402437 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் நோய் கண்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம், நோய் பரவுவதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முறை, கிருமி நாசினி தெளித்தல், கைகழுவும் முறை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கலெக்டர் அலுவலகத்தில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வந்த நபர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். பொது மக்கள், 'கொரோனா' பற்றி தகவல் அளிக்கவேண்டும் என்றாலும் அதில் அழைக்கலாம். அங்கு, பொது சுகாரத்துறையினராக மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பர். பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம். சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருக்க வேண்டும். ஒருவரையொருவர் கைகுலுக்குவதை தவிர்த்து, கை கூப்பி கும்பிடுமாறும், ஒருவருக்கொருவர், ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பேசவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வெளியில் சென்று வந்த பின், சோப்பு போட்டு முறையாக கைகழுவிய பின் உணவு உண்ண வேண்டும். 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X