பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதியில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

மோகனூர்: மோகனூர் அடுத்த தோளூர், அணியாபுரம், லத்துவாடி, ஆகிய ஊராட்சிகளின் எல்லையில், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி பின்புறம், வனத்துறைக்கு சொந்தமான, நூற்றுக்கணக்கான ஏக்கரில், 100 அடி உயர வனப்பகுதியில் மலை அமைந்துள்ளது. அந்த மலையில், நேற்று மதியம், 3:00 மணி முதல், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கீழ்புறத்தில் இருந்து மேல் நோக்கி தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில், மரங்கள், செடி, கொடி என, அனைத்தும் கருகி சாம்பலாகின. மாவட்ட வனத்துறையினர், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. ஆர்.டி.ஓ., கோட்டைகுமார், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X