பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி சந்தையில் தினமும் ரூ.5 கோடி விற்பனை பாதிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா அச்சத்தால், ஜவுளி சந்தையில், தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதித்துள்ளதாக, வருத்தம் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி தாலுகாவில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இவற்றில் நேரடியாக, மறைமுகமாக, ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் புடவை, வேட்டி ரகங்கள், தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். ஈரோட்டில் விலை குறைவாக உள்ளதால், பல்வேறு மாநிலத்தவர், மொத்தமாக புடவை, சேலை, ஆயத்த ஆடைகள் மற்றும் காடா துணிகளை, மதிப்பு கூட்டப்பட்ட துணிகளை வாங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா பிரச்னையால், ஈரோடு ஜவுளி சந்தையான கனி மார்க்கெட் மற்றும் அதை சார்ந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 10 நாட்களாக பிற மாநில வியாபாரிகள் வருகை முற்றிலும் சரிந்து, தினமும் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதித்துள்ளதாக, ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதேசமயம் கொரோனா அச்சுறுத்தலால், வடமாநிலங்களில் மொத்த ஜவுளி சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்ட, 50 கோடி ரூபாய் மதிப்பிலான ரேயான் துணி தேங்கியுள்ளது. ஏற்கனவே கொள்முதல் செய்து சென்றவர்கள், பணம் அனுப்ப தாமதமாவதால், கூலி கொடுக்க முடியவில்லை. வங்கி கடன் செலுத்துவதிலும், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று, ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X