சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பதியை தாக்கி 25 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: மொடக்குறிச்சி அருகே கொள்ளையர் அட்டகாசம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, வயதான தம்பதியை தாக்கி, 25 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாயை, கொள்ளையடித்த சம்பவம், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே, 60. வேலம்பா ளையம், திருக்கல் தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி, 75, விவசாயி. இவர் மனைவி பர்வதம், 70; மகன் பிரகாஷ், கோவையில் குடும்பத்துடன் வசிக்கிறார். தம்பதி தோட்டத்தில் தனியாக வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், வீட்டின் கதவை உடைத்து, 10 பேர் கும்பல் உள்ளே புகுந்தது. தூங்கி கொண்டிருந்த தம்பதியை உருட்டு கட்டையால் தாக்கியதில் மயக்கமடைந்தனர். அவர்களிடம் இருந்த மொபைல்போனை பறித்தனர். பின் பீரோவை உடைத்து, 25 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். நேற்று அதிகாலையில் அவ்வழியே சென்றவர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரகாஷ் புகாரின்படி, அரச்சலூர் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் ஆய்வு செய்தனர். கொள்ளையில் ஈடுபட்டது வட மாநில கும்பலா? அல்லது உள்ளூர் கொள்ளையரா? அல்லது பழைய குற்றவாளிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X