பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை தொகையை கட்டினால் விற்பனை பத்திரம்: ஓசூர் வீட்டு வசதி பிரிவு அறிவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓசூர்: 'கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில், குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்கள், தங்களது நிலுவை தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரத்தை பெற்று கொள்ளலாம்' என, ஓசூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில், வட்டி சுமையால் பலர் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். அவர்கள் மாத தவணையை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவற்றை முழுமையாகவும், நிலத்தில் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில், ஆண்டிற்கு ஐந்து மாத வட்டியை மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இச்சலுகை வரும், 31 வரை, மட்டுமே நடைமுறையில் இருக்கும். எனவே வட்டி தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, ஏற்கனவே நிலுவை தொகைக்கான விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவை தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X