பொது செய்தி

தமிழ்நாடு

10 நாளில் 500 டன் வெள்ளி தேக்கம்: 'கொரோனா'வால் தொழில் முடக்கம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா வைரஸ்' தாக்கத்தால், வெளி மாநில வியாபாரிகள், 'ஆர்டரை' நிறுத்தியதால், சேலத்தில், 10 நாளில், 500 டன் வெள்ளி ஆபரணங்கள் தேக்கமடைந்து, தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, மணியனூர், அன்னதானப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு, கொண்டலாம்பட்டி உள்பட, 80 இடங்கள், புறநகரில், 50க்கும் மேற்பட்ட இடங்களில், 12 ஆயிரத்து, 550 பட்டறைகளில், 1.90 லட்சம் தொழிலாளர், வெள்ளி கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும், 50 டன், பண்டிகையின்போது, 500 டன் வரை, வெள்ளி ஆபரணங்கள் தயாரித்து, மஹாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் கோலாப்பூர், ஊஞ்சா, தமிழகத்தில் மதுரை, நெல்லை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு, விற்பனைக்கு அனுப்பப்படும். சில ஆண்டாக, தீபாவளி, பொங்கல் பண்டிகையில் எதிர்பார்த்த ஆர்டர் இல்லை. இந்நிலையில், கடந்த பிப்ரவரி இறுதியில், நாடு முழுவதும், 'கொரோனா வைரஸ்' குறித்து தகவல் பரவியது. இதையடுத்து, வடமாநில வியாபாரிகள், வெள்ளி ஆபரண பொருட்களின், 'ஆர்டரை' குறைத்தனர். மார்ச், 10க்கு பின், முற்றிலும் நிறுத்திவிட்டனர். இதனால், சேலம் மாவட்டத்தில், கடந்த, 10 நாளில், 500 டன் வெள்ளி ஆபரணம் தேக்கமடைந்துள்ளது. அத்துடன், 'கொரோனா' பரவுவதை தடுக்க, ஒரே இடத்தில், பலர் கூட்டமாக சேர, அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் இயக்கப்பட்ட, வெள்ளி பட்டறைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களை, வெளி மாநிலத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், ஒரே வாரத்தில், 10 ஆயிரம் வெள்ளி பட்டறைகள் மூடப்பட்டுவிட்டன. அதில் பணிபுரிந்த, 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த, வெள்ளி பட்டறை உரிமையாளர் குணா கூறியதாவது: கொரோனா பீதிக்கு முன், வெள்ளி விலை கிலோ, 53 ஆயிரம் ரூபாயாக இருந்தது. வடமாநில வியாபாரிகள், 'ஆர்டர்' இல்லாததால், தற்போது, 39 ஆயிரத்து, 200 ரூபாயாக சரிந்துள்ளது. வெள்ளி ஆபரண தயாரிப்பு வீழ்ச்சியை சந்தித்ததோடு, சேலத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆபரணங்கள், 500 டன்னுக்கு மேல் தேக்கமடைந்துள்ளதால், பட்டறைகள் மூடப்பட்டு, தொழில் முடங்கியுள்ளது. கொரோனா பீதி நீங்கி, சகஜ நிலைக்கு வந்தால் மட்டுமே, மீண்டும் வெள்ளி பட்டறைகள் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X