பொது செய்தி

தமிழ்நாடு

ஆவின் ஒன்றியத்தில் 'பன்னீர்' தயாரிப்பு பிளான்ட்; விற்பனைக்கு சந்தைப்படுத்தும் பணி தீவிரம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம்: ஆவின் ஒன்றியம், 'பன்னீர்' தயாரித்து, சந்தைப்படுத்தி, விற்பனைக்கு தயாராகி வருகிறது.
சேலம், ஆவின் ஒன்றியத்தில், பால், மதிப்புகூட்டும் பொருட்களில் ஒன்றான, 'பன்னீர்' தயாரிப்பு பிளான்ட், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆவின் ஒன்றிய தலைவர் ஜெயராமன், பன்னீர் பிளான்ட்டை இயக்கி, வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து, 'பன்னீர்' உற்பத்தி முழுவீச்சில் தொடங்க உள்ளது. தினமும், 400 கிலோ உற்பத்தி திறனுடைய பிளான்ட்டில், முதல்கட்டமாக, 100 கிலோ உற்பத்தி செய்யப்படவுள்ளது. பன்னீர் பாக்கெட், 200 கிராம், 500 கிராம், ஒரு கிலோ அளவுகளில் கிடைக்கும். ஐ.எஸ்.ஓ., தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. வெளிச்சந்தையை விட, குறைந்த விலையில் கிடைக்கும் என, ஆவின் அலுவலர்கள் கூறினர்.

இதுகுறித்து, ஆவின் பொது மேலாளர் விஜயபாபு கூறியதாவது: சென்னை, ஆவினிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து, பன்னீர் விற்பனை செய்து வருகிறோம். இனி, சேலத்தில் தயாரித்து விற்பனை அதிகரிக்கப்படும். அதற்காக, சந்தைப்படுத்தும் பணி துரிதமாக நடக்கிறது. ஆவின் விற்பனை மையங்களில், விரைவில், 'பன்னீர்' கிடைக்கும். ஓட்டல், திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்கு, 'ஆர்டர்' செய்து பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagadeesh -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-202012:18:53 IST Report Abuse
jagadeesh பன்னீர் இல்லை, பனீர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X