அலட்சியமா இருக்காதீங்க!: அமைச்சர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சியமா இருக்காதீங்க!: அமைச்சர் அறிவுரை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (37)
Share
சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அலட்சியமாக இருக்காமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கை, மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இது நமது
corono, coronovirus, TNgovt, கொரோனா, தமிழகஅரசு, அமைச்சர், விஜயபாஸ்கர், பிரதமர்மோடி, முதல்வர் இபிஎஸ்,

சென்னை: கொரோனா வைரஸ் குறித்து பொது மக்கள் அலட்சியமாக இருக்காமல், விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் அறிவித்த மக்கள் ஊரடங்கை, மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இது நமது ஆரோக்கியத்திற்கு செய்யும் பணி. தேவையற்ற பயணம், நடமாட்டத்தை மக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
இதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் மிகவும் சவாலாக உள்ள விஷயத்தை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பது தான் முக்கியமான விஷயம்.
கொரோனா சவாலை எதிர்கொள்ள ஓய்வு பெற்ற டாக்டர்களுக்கும் அழைப்பு விடக்கப்பட்டுள்ளது. விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இல்லாமல் அரசு சொல்லும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். எதையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் பாராட்டு




latest tamil news



இதனிடையே, பிரதமர் மோடி, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று காலை முதல்வர் இ.பி.எஸ்., ஐ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, தமிழக அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கிய முதல்வர், மக்கள் ஊரடங்கிற்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X