பொது செய்தி

இந்தியா

5 நிமிடம் கைதட்டுவதால் கிடைக்கும் பலன் என்ன?

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (151)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாளை (மார்ச் 22) நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.காலை 7 முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கின்போது, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று 5 நிமிடங்களுக்கு கை தட்டி பாராட்ட
janatacurfew, clappinghands, கைதட்டுதல், பிரதமர் மோடி

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாளை (மார்ச் 22) நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலை 7 முதல் இரவு 9 மணி வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஊரடங்கின்போது, கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வெளியே நின்று 5 நிமிடங்களுக்கு கை தட்டி பாராட்ட வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்தார்.மோடி ஏன் கை தட்ட சொல்கிறார் என்று பலர் சந்தேகம் எழுப்பினர். இதற்கு சில காரணங்கள் உள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறியதாவது:மோடிக்கு உதித்த இந்த யோசனை உண்மையில் ஆச்சரியமானது.

ஜோதிடத்தில் வரும் பல விஷயங்களுக்கு அறிவியல் காரணங்கள் உள்ளன. ரேவதி நட்சத்திரத்துக்கு சந்திரன் இடம் பெயரும்போது, கை தட்டுவது, மணி அடிப்பது போன்றவற்ளை செய்தால் எழும் ஒலி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சுற்றுப்புறத்தில் நேர்மறை அதிர்வை உண்டாக்குகிறது.


latest tamil news




அதனால் தான் கோயில்களில் பெரிய மணிகளை கட்டி, ஒலிக்கச் செய்தனர். மணியோசையின் அதிர்வுகள் சுற்றுபுறத்தில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க வல்லவை. மோடிக்கு இதுபற்றி ஏதோ நிபுணர் நல்ல யோசனை தெரிவித்துள்ளார். எனவே தான், மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்ட சொல்லி உள்ளார் மோடி. நிச்சயம் இது வேலை செய்யும். மார்ச் 24 அன்று அமாவாசை. இது நெருங்கி வருவதால் நாளை (22)யே இருள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற நாட்களில் வைரஸ், பாக்டீரியா மற்றும் தீய சக்திகள் வேகமாக இருக்கும். இதுபோன்ற நாளில் இருட்டுவதற்கு முன்பு மாலை 5 மணிக்கே 130 கோடி மக்களும் ஒரே நேரத்தில் கை தட்டினால் நாடு முழுவதும் பெருமளவு அதிர்வு ஏற்படும். இது தீயவற்றை அழித்து, நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பலன் கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரம், இதற்கு நேர்மாறான கருத்துகளும் பரவி வருகின்றன. ‛‛மாலையில் கைதட்டுவதற்கு அறிவியல் காரணங்கள் இல்லை. ஒருவரை பாராட்டுவதற்காக கை தட்டுவது என்பது நமது பாரம்பரிய பழக்கம். எனவே, சும்மா இருப்பதற்குப் பதில் நோயை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோரை பாராட்டுவதற்காக கை தட்டுவதில் தவறு இல்லை'' என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-202000:17:27 IST Report Abuse
Ganesan Madurai திருட்டு திராவிட பம்மாத்து வேலை இனி எடுபடாது. திராவிடர் ஆரியர் வந்தேறி கைபர் போன்ற பொய்மூட்டைகளை அவிழ்த்து விட வேறு இடம் பார்த்துச் செல். தெலுங்கு பேசும் உன்ளய்ப் போன்ற வந்தேறி கூட்டம் 1947 முதல் தனது கற்பழிப்பு, கொலை, கருப்புபணம் பதுக்கல் மற்றும் மதம் பரப்பும் மொள்ளமாறித்தனத்தை மறைக்க தமிழர்களிடையே பல பொய்களை கூறி தமிழக பிராமணர் வகுப்பை நொக்கி தனது நிறவெறி காட்டி பிழைப்பு நடத்துகின்றனர். நீதான் இங்கு வந்தேறி. நீ முதலில் வெளியேறு.
Rate this:
Cancel
சீனு,கூடுவாஞ்சேரி எந்த கோவிலையும் மூடவில்லை. மக்கள் கூட்டத்தை தவிர்க்க அவர்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிகளைப் பின் பற்றி முக்கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது.
Rate this:
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
22-மார்-202022:41:46 IST Report Abuse
Sheri கை தட்டியதால் கிடைத்த பயன் என்னவெனில் மக்களிடம் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு கோரோணா காரணம் இல்லை என்பதை மக்கள் அனைவரும் தெளிவாக புரிந்து கொண்டுலார்கள். தர்போது மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X