பொது செய்தி

இந்தியா

கனடா பிரதமரின் மனைவி பெயரில் வைரலாகும் போலி வீடியோ

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கனடாபிரதமர், போலிவீடியோ, canadapm, wife, fakevideo,

லண்டன்: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி சோபி கிரேகோயரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பிரிட்டன் சென்று வந்த அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது.


latest tamil news





இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடியோ ஒன்றில் பெண் பேசியதை, சிகிச்சையின் போது சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. ஆனால், அந்த வீடியோ போலியானது.

அந்த வீடியோவில் உள்ள பெண் பேசியதாவது: யாராவது ஒருவர் மீண்டும் எந்த ஒரு வாய்ப்பையும் எடுக்க வேண்டும் என நினைத்தால், என்னை பாருங்கள். நான் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் மருத்துவ உபகரணங்களுடன் உள்ளேன் வீட்டில் இருந்து நீண்ட தொலைவில் உள்ளேன். இன்னும் யாராவது புகைத்து கொண்டிருந்தால், சிகரெட்டை கீழே போடுங்கள். உங்களுக்கு நுரையீரல் முக்கியம் என்பதால், நான் இதனை உங்களிடம் கூறுகிறேன். யாரும் தயவு செய்து மீண்டுமொரு வாய்ப்பை எடுக்காதீர்கள். ஏனென்றால், அது உங்களுக்கு மோசமாக அமைந்து, இங்கு கொண்டு வந்துவிடும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, அந்த வீடியோ பிரிட்டன் நாளிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது தெரியவந்தது. அந்த வீடியோவில் இருக்கும் பெண் டாரா லேன் லங்ஸ்டன்(39) என்பது தெரியவந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண், லண்டன் மேற்கு பகுதியில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்த போது, வீடியோ பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உடல்நலனில் அக்கறை செலுத்தும்படி சொல்லும்படி கூறியுள்ளார். இதனை சிலர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி பேசிய வீடியோ என பரப்பி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-மார்-202007:23:09 IST Report Abuse
skv srinivasankrishnaveni KANDRAAVIYE EVLO CHEAP MENTALITTTTTTTTTTTTTTTY
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
21-மார்-202019:11:33 IST Report Abuse
Nallavan Nallavan எவனாச்சும் சேட்டன்தான் இந்த வேலையைச் செஞ்சிருக்கணும் ....
Rate this:
Share this comment
Cancel
21-மார்-202015:41:46 IST Report Abuse
தங்கவேல் பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X