பொது செய்தி

தமிழ்நாடு

பொறுப்பு இல்லாத தமிழ் நடிகர்கள்

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (57)
Share
Advertisement
தமிழ்நடிகர்கள்,Tamilactors,

சென்னை:


தினமலர் வாசகர்களே....


தினமலர் இணையதள செய்திகளுக்கு நல்ல கருத்துக்களை பதிவிடும் வாசகர்களில் ஒருவரை தேர்வு செய்து, அவரது கருத்து, தினமலர் இணையதள முதல் பக்கத்தில் தினமும் சேர்க்கப்படுகிறது. இதில், உங்கள் கருத்தும் இடம்பெற, உங்களது உண்மையான பெயர், ஊர், நாடு, இமெயில் விலாசத்துடன் கருத்துகளை பதிவிடுமாறு வேண்டுகிறோம்.
தினமலர் இணையதளத்தில் ''சுய ஊரடங்கு: விழிப்புணர்வு ஏற்படுத்துவார்களா தமிழ் நடிகர்கள்?'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.


இந்த செய்திக்கு சென்னையை சேர்ந்த மாலத்தீவின் மாலே நகரில் இருந்து சந்தோஷ் குமார் எழுதிய கருத்து: தமிழ் சினிமா நடிகர்கள் ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டு ஜாதிவைத்து சினிமா எடுப்பார்கள். மதம் இல்லை எண்டு சொல்லி மதத்தை வைத்து படம் எடுப்பார்கள். இவர்கள் படம் வெளி வரும்போது தேவையில்லாத கருத்தை சொல்லி தங்களுடைய படத்துக்கு விளம்பரம் தேடுவார்கள். இதை அறியாத மக்கள் இவர்கள் தெய்வம் என்று அவர்கள் பின்னால் செல்வார்கள் . எந்த தமிழ் நடிகனாவது தமிழ் நாட்டுக்கு எதாவது செய்திருக்கிறார்களா?

இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகர்கள் கொரோனா வைரஸ் பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு நடிகர்கள் எப்படி வரி செலுத்தாமல் இருப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். இதில் வேறு மக்களுக்கு தத்துவம் சொல்கிறார்கள் . 50, 80 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று யோசிக்கட்டும். அதற்கு பிறகு அரசையும் , அரசியல்வாதியையும் குற்றம் சொல்லுங்கள் . இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
22-மார்-202009:39:40 IST Report Abuse
KumariKrishnan Bjp சினிமாவில்கூட நடிகர்கள் பொம்மைகள்தான் சொல்லிக்கொடுத்ததை சொல்பவர்கள் அவர்கள் வெறும் கட்டைகளைப்போன்றவர்கள் சினிமாவில் அந்த கட்டைகளை ஆட்டிவைப்பது இயக்குனர்களும் வசனகர்த்தாக்களும் கதாசிரியர்களும்தான்
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
22-மார்-202008:48:53 IST Report Abuse
Subbanarasu Divakaran காமராஜர் பெருந்தகை அன்றே சொன்னார் கூத்தாடிகள் என்று, அது தான் unmai
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
22-மார்-202007:36:23 IST Report Abuse
natarajan s நடிகர்கள் அதிலும் பிரபல்யமான நடிகர்கள் ஏதாவதொரு அரசியல் கட்சியுடன் தன்னை அடையாளப்படுத்துவது எல்லாம் மக்கள் சேவை செய்வதற்கு இல்லை , தங்களது வரி ஏய்ப்பை வருமானவரி சோதனையில் இருந்து காத்துக்கொள்ளவே , இப்படித்தான் சிவாஜி கணேசன் காங்கிரஸுடன் அடையாளப்படுத்தியதால்தான் வருமானவரி சோதனை எதுவும் நடைபெறவில்லை. அவர் என்ன சமூக சேவை செய்தார் 7 பொண்டாட்டி வைத்திருந்ததைத்தவிர , அவருக்கு அரசு செலவில் மணி மண்டபம், தமிழ்நாட்டின் சாபக்கேடு 1967 இல் ஆரம்பித்தது, இந்த சினிமாக்காரர்களால் , அண்ணாதுரை, கருணாநிதி , எம்ஜியார் அடுத்து ஜெயலலிதா , இதில் கடைசி இருவரும் நமது வாழ்க்கையில் விளையாடியது அவர்களது அரிதாரத்தில் வெளியே தெரியாமல் போய் விட்டது. கருணாநிதி தமிழ் தமிழன் என்ரு முழங்கியாவது பல திட்டங்களை கொண்டு வந்தார் , எம்ஜியாருக்கு தாய்க்குலம் மட்டுமே தெரியும் , ஜெயாவுக்கு வசூல் மட்டுமே தெரியும் , ஆகஇவர்கள் நன்றாக நம் முன் நடித்தே சென்று விட்டார்கள். மக்கள் ஏமாளிகளாய் இருப்பதால் . இன்னும் இவர்களை போற்றிக்கொண்டு இருக்கிறோம் . தற்போது திருவாளர்கள், ரஜினி, கமல் , விஜய் என்று அடுத்த கூட்டம் . எப்போது விடிவோ தமிழனுக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X