அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட்தேர்வு: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

சென்னை: அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி இன்று (மார்ச் 21) 110 விதியின் கீழ் அறிவித்தார்.



latest tamil news


பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வு நுழைவுத் தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இது குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்த விபரம்:

கடந்த ஆண்டுகளில் நடந்த நீட்தேர்வில் பங்கேற்ற தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஆகையால் நீட்தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சீட்டில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படும்.


latest tamil news


மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவுக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்படும். அதில், சட்டத்துறை செயலர்கள், பள்ளிக் கல்வித்துறை, குடும்ப நலத்துறை, சுகாதாரத் துறை, 2 கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆணையம், சமூகப் பொருளாதார ரீதியாக ஆராய்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசிற்கு பரிந்துரை செய்யும். ஒரு மாத காலத்தில், ஆணையம் ஆய்வு செய்து அரசிற்கு பரிந்துரையை அளிக்கும். இந்த உள்ஒதுக்கீடு எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கும் பொருந்தும்.

நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு கடுமையாக சட்டப் போராட்டம் எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் சட்டசபையில் தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202022:21:16 IST Report Abuse
சிந்திக்கும் வடிவேலு அருமை திரு பழனி அய்யா அவர்களே. வயிற்றில் பால் ஊத்தி இருக்கிறீர்கள். இது ஒரு கலைஞர் மகனுக்கு ஒரு செருப்படி. தனியார் ஆங்கிலப்பள்ளி இனிமேல் குறையும். அரசுப்பள்ளிகள் தரம் உயரும். எனக்கு என்னமோ காமராஜர் எம்ஜி ஆருக்கு அடுத்து நீங்கள்தான் சிறப்பாக ஆட்சி செயகிறீர்கள். பந்தா அரசியல் இல்லை. அணைத்து மந்திரிகளும் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-202020:05:04 IST Report Abuse
தாமரை ரங் பீஜேபி வாழ்க மோடி வாழ்க தாமரை மலர்ந்தே தீரும்..திராவிட கட்சிகள் ஒழியும்..ஹிந்தி வாழ்க..
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
22-மார்-202009:42:08 IST Report Abuse
selva//பீஜேபி வாழ்க மோடி வாழ்க தாமரை மலர்ந்தே தீரும்..திராவிட கட்சிகள் ஒழியும்// ஓகே ..ஹிந்தி வாழ்க.. மூணே...
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
21-மார்-202019:49:46 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பழனி இவ்வளவு நாள் தூங்கி கொண்டு இருந்து கொண்டு இப்போ தான் ஊராட்சியில் தோற்றவுடன் அன்னான் இவ்வளவு சுறுசுறுப்பு ஆகி தேர்தலுக்காக என்ன என்னவோ பிதற்றுகிறார் இதை இந்த மூன்று வருடம் தூங்கியவர் செயல் வேதனை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X