சங்குகள் முழங்கட்டும்,

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மணி ஒலிக்கட்டும்,சங்குகள் முழங்கட்டும்,கரவொலி விண்ணை எட்டட்டும்.latest tamil news


இன்று (22/3/20) மக்கள் ஊரடங்கு
மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருந்து கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் கைகோர்க்க இருக்கின்றனர்.


latest tamil newsஇதன் ஒரு கட்டமாக மாலை 5 மணியிலிருந்து 5:05 மணி வரை தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் அவரவர் வீட்டு வாசலில் பால்கனியில் மொட்டை மாடியில் நின்று கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் போக்குவரத்து ஊழியர்கள் போலீசார் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு பாராட்டையும் உற்சாகத்தையும் தரும்வகையில் வீட்டில் சங்கு இருந்தால் சங்கை எடுத்து முழக்கமிட்டும்,பூஜைக்கான மணி எடுத்து அடித்தும் இது இரண்டும் இல்லை என்றால் கைதட்டியும் தங்கள் ஆதரவை தெரிவிக்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளோர்.
இப்போது நமக்கு தேவை எல்லாம் மன உறுதியும் மருத்துவ உலகின் அறிவுரையும்தான்.
மருத்துவ உலகின் அறிவுரை அடிக்கடி கையைக்கழுவுங்கள் அவசியமின்றி வெளியே செல்லாதீர்கள் சுத்தம் சுகாதாரத்தை பேணுங்கள் என்பதுதான்.
மன உறுதிக்குதான் பிரதமரின் உரை மருந்தாக அமைந்துள்ளது.
பிரதமரின் உரையை யாரும் அலட்சியப்படுத்திவிடக்கூடாது.
இத்தாலியில் இன்று நிலவும் பயங்கரத்திற்கு காரணம் அவர்கள் கொரானாவை
அலட்சியப்படுத்தியதுதான்.அரசாங்கம் கொடுத்த விடுமுறையை ஒன்றாய்க்கூடி கொண்டாடுவதற்கும் கேளிக்கைக்கும் பயன்படுத்தியதன் விளைவு ரத்த சம்பந்தங்களுக்கு கூட தெரிவிக்காமல் பெட்டியில் அடைத்து எடுத்துப் போய் அடக்கம் செய்கின்றனர்.'ஈரானில் 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொரோனாவால் உயிரிழக்கிறார். ஒரு மணி நேரத்துக்கு, 50 பேர் வைரசால் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களின் நிலமை நமக்கு வரக்கூடாது என்றால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை நாம் நமக்கான கிழமையாக மாற்ற வேண்டும்.
அது என்ன அன்று ஒரு நாள் மட்டும் வீட்டிற்குள் இருந்தால் கொரானாவை ஒழிக்க முடியுமா? என்று வீம்பு பேசுபவர்களுக்கு சில வார்தைகள்.
கொரானாவிற்கு இன்று வரை மருந்து இல்லை பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் எதிர்ப்பு சக்தியின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட நாட்களில் தேறி அவர்களாகவே வெளியேறுகின்றனர் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இறந்துவிடுகின்றனர்.
இந்த வைரஸ் பொதுவாக காற்று வெளியில் 12 மணி நேரம் உலாவும் நாம் 14 மணிநேரம் வீட்டிற்குள் இருக்கும் போது கொரானா தொற்றுவது என்பது எளிதாக இருக்காது இது ஒன்று.
இரண்டாவதாக இது ஒரு முயற்சி மட்டும் அல்ல பயிற்சியும் கூட, நமக்காக நாட்டுக்காக ஒரு இடத்தில் ஒரே இடத்தில் நம்மை இருத்தி வைப்பதற்கான பயிற்சி இது.தேவைப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் இந்த முயற்சி தொடரும் போது மக்களுக்கு அப்போது அயர்ச்சியாக இருக்காது.

மூன்றாவதாக ஞாயிற்றுக்கிழமைதான் ஏழை எளிய அன்றாட கூலிகளின் விடுமுறை நாள். மற்ற நாட்களில் இந்த ஊரடங்கை அமுல்படுத்தினால் ஏற்கனவே பாதிப்பில் உள்ள இந்த மக்கள் இன்னும் பாதிப்பு அடைவார்கள்
இப்படி காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றுள்ள நிலமைக்கு இத்தாலியில், வெளியே வந்தால் ஏன் எதற்கு என்று கேட்காமல் கைது செய்யப்படுவார்கள் ,சீனாவில் அபாயகரமான விலங்கு போல வலை போட்டு பிடித்து மக்களை அதற்கான வேனில் ஏற்றிச்சென்றுவிடுவார்கள் ஆனால் நமது இந்தியாவில் அப்படி எல்லாம் இல்லை விபரீதத்தை விளக்கிச் சொல்லி வேண்டுகோள்தான் விடுக்கப்படுகிறது.
கவலையோடு விடியும் நாள் இப்போது எல்லாம் அதிர்ச்சியோடுதான் முடிகிறது காரணம் விடை தெரியாத விரக்தி,என்னவென்று சொல்லமுடியாத மன உளைச்சல்,நிகழ்காலம் ஏற்படுத்தும் பீதி,எதிர்காலம் உணர்த்தும் அச்சம், கடந்த நான்கு நாட்களாக மக்கள் அனுபவித்துவரும் இந்த அவஸ்தைகளுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மாற்றாக அமையலாம்.
ஆகவே பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ‛மக்கள் ஊரடங்கை' மகத்தான வெற்றி அடையச் செய்வோம், கொரானாவை நாட்டைவிட்டு மட்டுமல்ல உலகைவிட்டே விரட்டுவோம்.

எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-மார்-202012:39:19 IST Report Abuse
Nallavan Nallavan உலக வரலாற்றில் கொரோனா நிச்சயம் இடம் பிடிக்கும்.. ஆனால் கொரோனாவின் வரலாற்றில் இந்தியா இடம் பெறவேண்டாமே ????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X