பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி வீடியோவை நீக்கியது டிவிட்டர்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (150)
Share
Advertisement
Rajinikanth, Rajini, ISupportJanataCurfew, Coronavirus,

சென்னை : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட சுய ஊரடங்கை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றுள்ளார். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் பரவ தொடங்கி உள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாளை(மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு நாடு முழுக்க வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்பிரபலங்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த விஷயத்தில் நடிகர்களும் முன் வந்து பிரதமரின் கோரிக்கையை ரசிகர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலையே இதை வரவேற்றிருந்தார். தொடர்ந்து இன்றும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டார்.


latest tamil news



இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் சுய ஊரடங்கு உத்தரவை வரவேற்றுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது நிலையில் உள்ளது. அது 3வது இடத்திற்கு போய் விடக்கூடாது. மக்கள் வெளியில் நடமாடும் வேளைகளில் இருக்கும் இந்த வைரஸ், 12 - 14 மணிநேரத்தில் பரவாமல் இருந்தாலே மூன்றாவது நிலைக்கு போவதை தடுத்து விடலாம். அதற்காக தான் பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதி ஊரடங்கு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.



இத்தாலியில் கொரோனா வைரஸ் 2வது நிலையில் இருந்தபோது அந்த நாட்டு அரசு எச்சரித்தது. ஆனால் மக்கள் உதாசீனப்படுத்தியதால் பலர் இறந்து போனார்கள். அதேமாதிரி நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. ஆகவே அனைவரும் 22ம் தேதி அந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வைரஸை பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலரும் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் சொன்ன மாதிரி மாலை 5மணிக்கு மனதார பாராட்டுவோம். அவர்களின் குடும்பம் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ஆனால் இந்த வீடியோவை 4 மணி நேரம் கழித்து 8. 40 மணி அளவில் டுவிட்டர் நீக்கியது. இது டுவிட்டர் விதிமுறைகளுக்கு முரணானாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கமல் வேண்டுகோள்



கொரோனா வைரஸ் தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது:

கூட்டம் கூடும் இடத்திற்கு போகாதீர்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு செல்லுங்கள். நான் இப்போது வந்திருப்பது கூட இதை உங்களுக்கு சொல்வதற்கு தான். இப்படி செய்வதன் மூலம் பிறரிடமிருந்து வைரஸ் உங்களுக்கு பரவாமலும், உங்களிடமிருந்து பிறருக்கு பரவாமலும் தடுக்கலாம்.

கொரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்று கிடையாது. வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்பே செய்வோம். விலகி இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என கண்மூடித்தனமான நம்பிக்கையாலும், அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாகி விடக்கூடாது. முன்னெச்சரிக்கை தான் முக்கியமானது, மறந்துவிடாதீர்கள்.

உடல் ஆரோக்கியம் முக்கியம். ஆகையால் தான் இந்த இரண்டு வாரம் மிக முக்கியமானது. இயந்திரமா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில் இருந்து காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன இடைவெளி கிடைத்திருக்கிறது. அதை சரியா பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். பத்திரமா இருங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
22-மார்-202020:28:38 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ரஜினி உளறிட்டாரு -ன்னு சிரிக்கிற பயலுவளுக்கு பிகேயோட ஐடி டீம்ல எதோ ஒரு எடுபிடி செஞ்ச வேலைதான்னு நல்லாவே தெரியும் இவனுகளுக்கும் அந்த அளவுக்கு மண்டையில சரக்கு இருந்தா ஏன் ........
Rate this:
Cancel
Kannan - Chennai,இந்தியா
22-மார்-202017:51:53 IST Report Abuse
Kannan இங்கு ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார் அதாவது ரஜினிக்கு அறிவில்லை என்று. நம்ம சுடலைக்கு மற்றும் குருமாவிற்கு இருக்க தம்பி?
Rate this:
Cancel
123 - chn,இந்தியா
22-மார்-202017:27:46 IST Report Abuse
123 ரஜினி சார், போதும் . இதோடு உங்கள் சினிமா வாழ்க்கையை பாருங்கள் .நீங்கள் வருவீர்கள் என்று இலவு காத்த கிளியாக மக்கள எதிர்பார்த்து ஓய்ந்து போனார்கள் .இனி வேண்டாம் உங்கள் ரெட்டை குதிரை சவாரி . மக்கள் பைத்தியங்கள் அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X