சுய ஊரடங்கு; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் செய்தி

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் நாளை சுய ஊரடங்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் மக்கள் அனைவரையும் பயணங்களை தவிர்த்து வீட்டிலிருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.



latest tamil news


பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் அளிக்கும் உத்தரவை நாம் பின்பற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் தனிமையில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்ட அனைவரும், தயவு செய்து வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்படிச் செய்வது உங்களை மட்டுமின்றி, உங்களது குடும்பத்தையும், நண்பர்களையும் பாதுகாக்கும். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்பதை மறக்க வேண்டாம். பீதி தேவையில்லை. வீட்டில் இருப்பது மட்டும் முக்கியமல்ல, நீங்கள் தங்கியிருக்கும் நகரம், ஊர்களிலேயே இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவாது. இது போன்ற நேரங்களில், எங்களது ஒவ்வொரு சிறிய முயற்சியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்."
இவ்வாறு பிரதமர் தனது டுவிட்டரில் நாட்டு மக்களுக்கு கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
21-மார்-202023:34:09 IST Report Abuse
Ab Cd கொரோனாவுக்கு எதிராக அரசு நடத்தும் நாடு தழுவிய பாரத் பந்த்
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
21-மார்-202021:47:27 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு 🔴🔴இது மாற்றி யோசிக்கும் காலம் 🌎கொரோனா வைரஸ் சொல்லும் வாழ்க்கை பாடம் 👉🏿துன்பம் வந்தால் வழிபாட்டு தளத்துக்கு போ.👉🏿நோய் வந்தால் வழிபாட்டு தளத்துக்கு போ.. 🌈கடவுள் வழிபாட்டு தளத்தில் இருக்கிறார், என்று சொன்னது, மதங்கள். 🔥இன்று வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டு விட்டது..⚫நோய் வந்தவர்கள் ⚫நோய் வராதவர்கள் எவரானாலும்... 🤷‍♂️வழிபாட்டு தளத்துக்கு வரவேண்டாம்... 🙏வீட்டிலிருந்தே உங்கள் கடவுளை வழிபடுங்கள், 🙇‍♂️அறிக்கை அளித்து விட்டது மதங்கள்.. 🖐️யாரையும் தொடாதே..🚑நோய் வந்தால் மருத்துவமனைக்கு போ.. அங்கே டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவ தூய்மை பணியாளர்கள் என்று.. 👥சக மனிதர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள்... 🤝தொட்டு பேசுவார்கள்.. 💪தொட்டு தூக்குவார்கள்.. 👋தொட்டு மருத்துவ பணியாளர்கள் பணி செய்வார்கள்.. புரிகிறதா...?😱 🙏🙏கடவுள் இப்போது இருக்கும் இடம் மருத்துவமனை தான்.. 👍YES மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்களாக மனிதர் ரூபத்தில் கடவுள் இருக்கிறார்.. சக மனிதரிடம் தான் கடவுள் இருக்கிறார் 🔴கடவுளை வெறுக்க சொல்லவில்லை 🔴வழிபாட்டு தளங்களை வெறுக்க சொல்லவில்லை.. 🙋‍♂️மனிதனை நேசிப்போம் 🙆‍♂️மனிதநேயத்தை மதிப்போம். 🔴🔴இந்த செய்தியைத்தான்.. கொரோனா வைரஸ் கூக்குரலிட்டு சொல்கிறது.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - கலைஞர் சமாதியில் தயிர் வடை ,இந்தியா
21-மார்-202020:53:05 IST Report Abuse
வல்வில் ஓரி டெல்லியில் மட்டும் 72 லட்சம் பேர் நியாய விலைக் கடையிலிருந்து பொருள்களை வாங்குகிறார்கள். அது நபர் ஒருவருக்கு 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும். இது இலவசமாக வழங்கப்படும். இந்த மாதத்திற்கான முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது. இதனால் 8.5 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவார்கள். நாடு முழுவதும் ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவசரத் தேவைக்காகச் சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம். அதைக் கருத்தில் கொண்டு டெல்லியில் நாளை 50 சதவிகிதப் பேருந்துகள் இயங்கும்”
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X