குரூப்2 அரசு வேலை வாங்கி தருவதாக 27 லட்சம் மோசடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரூப்2 அரசு வேலை வாங்கி தருவதாக 27 லட்சம் மோசடி

Added : மார் 21, 2020
Share

ராமநாதபுரம்: குருப் 2 தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர், டி.என்.பி.எஸ்.சி முன்னாள் ஊழியர்களிடம் அரசு வேலைக்காக 27 லட்சம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

மதுரை சம்மட்டிபுரம் பாண்டிய நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவர் 2016ம் ஆண்டு, ஜனவரியில் நடந்த குருப்-2 தேர்வை எழுதியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் ஊழியர்களான சிவா, நாகேந்திர ராவ், ரமணி என்ற ராஜேந்திரன் ஆகியோரது தொடர்பு சண்முகந்தரத்துக்கு கிடைத்துள்ளது. இவர்களது மூலமாக அரசு பணியில் முறைகேடாக சேர முயன்றுள்ளார். அதர்காக, ராமநாதபுரத்தில் வைத்து 2018ம் ஆண்டு டிசம்பரில் அந்த மூன்று நபர்களிடமும் 27 லட்சம் ரூபாய பணத்தை சண்முக சுந்தரம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு சண்முக சுந்தரத்துக்கு ஓய்வு பெற்ற முன்னாள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையக்குழு உறுப்பினர் சுதன் என்பவரது பெயரில், டி.என்.பி.எஸ்.சி.யிடம் இருந்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணத்தை வாங்கியவர்கள் உறுதியளித்தபடி அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றினர். இதனால் பணத்தை இழந்த சண்முக சுந்தரம், ராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X