சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

அறிவியல் ஆயிரம்
எத்தனை 'சோதனை'

'கொரோனா' வைரஸ் பாதிப்பு தொடர்கிறது. இந்த நிலையில் கொரோனா பதிப்பு உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட்டதில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் பிப்.24ன் படி, 3,20,000 பேரிடமும், இரண்டாவது இடத்தில் தென் கொரியாவில் மார்ச் 13ன் படி 2,48,647 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் மார்ச் 12ன் படி 86,011 பேரிடமும், நான்காவது இடத்தில் ரஷ்யா மார்ச் 11ன் படி 76,963 பேரிடமும், ஐந்தாவது இடத்தில் உள்ள பிரிட்டனில் மார்ச் 12ன் படி, 29,764 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்
மருத்துவ ஆராய்ச்சி

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.,), மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது உயிரியல் மருத்துவ துறை ஆய்வில் உருவாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு பணியில் ஈடுபடுகிறது. இது 1911ல் இந்திய ஆய்வு நிதி கழகம் என உருவாக்கப்பட்டது. 1949ல் ஐ.சி.எம்.ஆர்., என மாற்றப்பட்டது. தலைமையகம் டில்லி. இதன் கீழ் நாடு முழுவதும் பல ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இதில் காசநோய், டெங்கு, எபோலா வைரஸ், எய்ட்ஸ், மலேரியா உள்பட பல நோய்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X