சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

என் நாவில் தமிழ் மொழி சரளமாக வந்தது!

Updated : மார் 22, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
என் நாவில் தமிழ் மொழி சரளமாக வந்தது!

'ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி...' என்ற கணீர் குரலுடன், 1962 முதல், 50 ஆண்டுகள், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பணியாற்றி ஓய்வுபெற்று, மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயண சுவாமி: ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக நான் தேர்வான உடனே, என் மாமா, 'உன் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும்; மிகவும் புகழ் அடைவாய்' என, ஆசிர்வாதம் செய்தார்.பி.ஏ., ஆங்கிலம் படித்து விட்டு, தமிழ் செய்தி வாசிப்பாளராக ஆனது, எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. என் தாய்மொழி தமிழ் மீது, எனக்கு இருந்த ஆர்வம் தான், அந்த மொழியில் சிறப்பாக செய்தி வாசிக்க துாண்டியது. மேலும், என் தொழிலை நான் மிகவும் நேசித்தேன். காவிரிக் கரையோரம் வசித்த பெற்றோருக்கு பிறந்ததால், தமிழ் என் நாவில், சரளமாக வந்தது; அன்று, தமிழகம் முழுவதும் என் குரலை கேட்க காத்திருந்தது. அதை இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.ஆரம்ப நாட்களில், செய்தி வாசிக்க நிறைய பயிற்சி செய்ய வேண்டும். ல, ள, ழ மற்றும் ண, ன எழுத்துக்களை சரியாக உச்சரிக்காவிட்டால், பொருளே மாறிவிடும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும் செய்தியை, தமிழில் மொழி மாற்றம் செய்த பிறகே, தமிழில் வாசிக்க முடியும்.ெவளிநாட்டு செய்திகளை வாசிக்கும் போது, அந்த நாட்டின் தலைவர்கள் பெயரையும் சரியாக உச்சரிக்க வேண்டும். அந்த நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு போன் செய்து, அந்த தலைவர்களின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை, கேட்டு தெரிந்து கொள்வேன். நான் வாசிப்பதில், எந்த தவறும் வந்து விடக் கூடாது என்பதில், மிகுந்த கவனமாக இருப்பேன். எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைெவளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, அதன்படி செய்வேன்.செய்தி வாசிக்கும் நேரத்திற்கு, 2 - 3 மணி நேரத்திற்கு முன்பாகவே, அலுவலகம் சென்று விட வேண்டும். எனக்கு, எப்போதும் அழகாக இருக்க பிடிக்கும். என் புகுந்த வீட்டில், என்னை யாரும் குறை கூறியது இல்லை. என் கணவருக்கு என் மீது மிகுந்த பாசம் உண்டு. உதாரண தம்பதியாக நாங்கள் வாழ்ந்தோம்.குழந்தைகள் பிறந்ததும், கணவரும், அவரின் பெற்றோரும் மிக ஆதரவாக இருந்தனர். அதனால், செய்தி வாசிக்க, இரவில் எந்த நேரமும் சென்று வர முடிந்தது.என் கணவர் நாராயணசுவாமி, எனக்கு கிடைத்த வரம். அவர் இறந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு மகன், மகள். இருவரும் உயர்ந்த வேலைகளில் உள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகளை அறிந்து கொள்ள, அதை வாசிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு, இறைவன் கொடுத்த வரம்!--


நான் விரும்பியே தொழுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறேன்!தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை, தன் வாழ்நாள் சேவையாக செய்து வரும் தோல் நோய் சிகிச்சை மருத்துவர், டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணன்:
நான் பிறந்த ஊர் கும்பகோணம். எனக்கு, 16 வயது இருக்கும். மகாமக குளத்தை சுற்றி ஏராளமானோர் நின்று, குளத்தில் மிதந்த பிணத்தை பார்த்து, தங்களுக்குள் பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.பள்ளி சென்று திரும்பிய நான், அந்த உடலைப் பார்த்தேன். தொழுநோயாளி ஒருவரின் உடல் அது. துணியின்றி, மிதந்து கொண்டிருந்தது. மேலே அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி, அந்த உடலுக்கு போர்த்தி, உடலை எடுத்து, பிறர் உதவியுடன், கை ரிக் ஷாவில் ஏற்றி, சுடுகாட்டில் எரியூட்டி வந்தேன்.பள்ளி சென்று தாமதமாக வந்ததை அறிந்த என் தந்தை, கண்டிப்பார் என பயந்தபடி வந்தேன்.
ராணுவ வீரரான அவர், என்னை பாராட்டினார். அப்போதே முடிவு செய்தேன். மருத்துவம் படிக்க வேண்டும். அதுவும், தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய தோல் மருத்துவம் படிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதன்படி வேலுார் அருகே உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினேன். ஏராளமானோருக்கு, எச்.ஐ.வி., நோய் தொற்று இருந்தது. அறியாமையால் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, என்னை கலங்கச் செய்தது.மருத்துவமனையில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது தான், என் கணவர் என்னை பெண் பார்த்துச் சென்றார்.'திருமணத்திற்கு பிறகும், தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பேன்; அதை தடுக்கக் கூடாது' என, அவரிடம் நிபந்தனை விதித்தேன்.
திருமணத்திற்கு பின், திருவண்ணாமலை அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்தின் மருத்துவமனையில் சேவை செய்து கொண்டிருந்தேன். தெரு தெருவாக சென்று, தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பேன். என் குழந்தைக்கு பால் கொடுக்க, மாமியார் என் குழந்தையை துாக்கி வருவார். பால் கொடுத்து, குழந்தையை கொடுத்து அனுப்புவேன்.தொழுநோய் தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் என பலரும் அஞ்சுவர். அது, அப்படியில்லை. எத்தனையோ ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வந்ததில்லை. பணம், புகழ், பெயர் என எதுவுமே நிரந்தரம் இல்லை. அவற்றின் பின் செல்லாமல், சுத்தி இருக்கிறவர்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய பலரும் முன்வர வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு!Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
22-மார்-202022:51:32 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி Clap Clap
Rate this:
Share this comment
Cancel
S Manikandan - chennai,இந்தியா
22-மார்-202019:38:48 IST Report Abuse
S Manikandan வணக்கத்துக்கு உரியவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-மார்-202017:29:59 IST Report Abuse
Endrum Indian வாழ்த்துக்கள் டாக்டர் ரேணுகா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X